க.பரமத்தி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மார்க்கண்டேயன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நீலகண்டன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் தேர்வு செய்யப்பட்டன.
இதில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், குடிநீர் வசதி, சிமெண்டு சாலை அமைத்தல் போன்ற பணிகள் 30 ஊராட்சிகளில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் செய்யப்படுகிறது. இதையடுத்து, பல்வேறு தீர்மான பொருட்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாசிக்கப்பட்டன. கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.