கே.புதுப்பட்டியில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்
கே.புதுப்பட்டியில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
கே.புதுப்பட்டி அருகே வம்பரம்பட்டி கிராமத்தில் குட்டிஆண்டவர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடத்தப்பட்டது. பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 87 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு பிரிவு பந்தயத்தில் 20 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பந்தயத்தில் 67 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் பந்தயம் 2 பிரிவாக நடத்தப்பட்டது. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. பந்தயமானது வம்பரம்பட்டி விலக்கிலிருந்து காரைக்குடி பைபாஸ் சாலையில் நடைபெற்றது. பந்தயம் நடைபெற்ற சாலையின் இருபுறமும் திரளான பொதுமக்கள் திரண்டு இருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர்.