தொழுதூரில் மனுநீதிநாள் முகாம்: ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்
தொழுதூரில் மனுநீதிநாள் முகாமில் ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.
ராமநத்தம்,
திட்டக்குடி அடுத்த தொழுதூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனி முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு தனி துணை ஆட்சியர் கற்பகம் வரவேற்று பேசினார்.கூடுதல் கலெக்டர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் வாழ்த்துரை வழங்கினார்.சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு 1,066 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 99 லட்சத்து 6 ஆயிரத்து 44 மதிப்பீட்டில் பட்டா மாற்றம், புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து தொழுதூாில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்ணன், மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ரமேஷ் பாபு, திட்டக்குடி தாசில்தார் கார்த்திக், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன், தொழுதூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தேன்மொழி, ஒன்றியக்குழு தலைவர் கே.என்.டி.சுகுணா சங்கர், துணை தலைவர் கலைச்செல்வி செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் செல்வி ராஜரத்தினம், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், தொழுதூர் ஊராட்சி செயலாளர் செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.