திருச்சி ஜமால்முகமது கல்லூரியில் ஜூனியர் பேட்மிண்டன் சீசன்-2 போட்டி தொடங்கியது

திருச்சி ஜமால்முகமது கல்லூரியில் ஜூனியர் பேட்மிண்டன் சீசன்-2 போட்டி நேற்று தொடங்கியது.

Update: 2023-07-12 18:50 GMT

ஜூனியர் பேட்மிண்டன்

திருச்சி ஜமால்முகமது கல்லூரி உள்விளையாட்டு அரங்கத்தில் ஜூனியர் பேட்மிண்டன் லீக் (ஜே.பி.எல். சீசன்-2) போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் ரெயின்போ ராக்கர்ஸ், திருச்சி தமிழ் வீரர்கள், திருவாரூர் டெல்டாகிங்ஸ், விருதை வெங்கைஸ், கோவை சூப்பர்கிங்ஸ், சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ், தஞ்சை தலைவாஸ், மதுரை இந்தியன்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

பேட்மிண்டன் போட்டியை தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவர் அன்புமணி ராமதாஸ், செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் நேற்று மாலை தொடங்கி வைத்தனர்.

ரூ.70 லட்சம் பரிசு

பல்வேறு கட்டங்களாக நடைபெறும் இந்த போட்டியின் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதில் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கலந்து கொள்கிறார். போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகையாக ரூ.70 லட்சம் வழங்கப்படுகிறது.

தொடக்க விழா நிகழ்ச்சியில் நியூரோஒன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் விஜயகுமார், ஜமால்முகமது கல்லூரி முதல்வர் இஸ்மாயில், பொருளாளர் ஜமால்முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்