நிலுவை வழக்குகள் குறித்து ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு

தஞ்சை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நிலுவை வழக்குகள் குறித்து ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-06-25 20:51 GMT


தஞ்சை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நிலுவை வழக்குகள் குறித்து ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு

சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கார்த்திகேயன், தமிழ்ச்செல்வி ஆகியோர் தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு நேற்று வந்தனர். இவர்களை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மதுசூதனன் மற்றும் நீதிபதிகள் வரவேற்றனர். பின்னர் ஐகோர்ட்டு நீதிபதிகள், நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேரும் ஆய்வு செய்தனர். இதையொட்டி தஞ்சை நீதிமன்றம் மட்டுமின்றி திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் தஞ்சைக்கு வந்திருந்தனர்.

5 ஆண்டுகளுக்கு மேல்

இவர்களை ஒவ்வொரு நீதிபதியாக அழைத்து தங்களது எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் எவ்வளவு, குறிப்பாக 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருக்கும் நிலை என்ன? இந்த வழக்குகளை விரைவாக விசாரிக்க நடைமுறை சிக்கல்கள் ஏதும் இருக்கிறதா? என ஐகோர்ட்டு நீதிபதிகள் கேட்டறிந்தனர். அப்போது வழக்குகள் நிலுவையில் இருக்க காரணம் என்ன? என நீதிபதிகள் தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவித்தனர்.இவைகளை கேட்டறிந்த ஐகோர்ட்டு நீதிபதிகள், எல்லா வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தனர். இதேபோல் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்