சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-11-25 22:06 GMT

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

போக்சோ சட்டத்தில் கைது

ஈரோட்டை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ந் தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த கூலி தொழிலாளியான அசோகன் (58) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய் இதுகுறித்து, ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பேக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அசோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

5 ஆண்டு சிறை தண்டனை

இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி மாலதி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட அசோகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் நீதிபதி மாலதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்