அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி

திருப்பத்தூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்பட்டது.

Update: 2023-10-05 19:30 GMT

திருப்பத்தூர்

தமிழக அரசின் புதிய தொழில் கல்விக்கொள்கையின் அடிப்படையில் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 10 நாள் தொழில் பயிற்சி நடைபெறுகிறது.

இதில் முதல் நாள் தனியார் இருசக்கர வாகன பழுது நீக்கும் பட்டறையில் பயிற்சி தொடங்கப்பட்டது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவசைலம் பயிற்சியை ெதாடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தொழிற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், கணினி ஆசிரியர் பாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மேலாளர் கணேசன் மாணவர்களை வரவேற்றார். மாணவர்களுக்கு தொழில் பயிற்சியை பொறியாளர்கள் ஆனந்த், சோனைக்காளை ஆகியோர் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்