கூட்டு குடிநீர் திட்ட பணிகள்

வீரமாங்குடி கொள்ளிடம் ஆற்றில் ரூ.1,750 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தலைமை என்ஜினீயர் ஆய்வு செய்தார்.

Update: 2023-09-13 21:09 GMT

வீரமாங்குடி கொள்ளிடம் ஆற்றில் ரூ.1,750 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தலைமை என்ஜினீயர் ஆய்வு செய்தார்.

கூட்டு குடிநீர் பணிகள்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் நாகப்பட்டினம் நகராட்சி, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு, திட்டச்சேரி ஆகிய பேரூராட்சிகள் மற்றும் 980 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.1, 752 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் வழங்க திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டது. இதையடுத்து பாபநாசம் தாலுகா வீரமாங்குடி கொள்ளிடம் ஆற்றில் நீர் சேகரிப்பு கிணறு, பாலம் அமைத்தல், குழாய் அமைக்கும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.

ஆய்வு

இந்த பணியினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை என்ஜினீயர் ஆறுமுகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆலோசனைகள் வழங்கினார். ஆய்வின் போது நிர்வாக என்ஜினீயர் சேகர், உதவி நிர்வாக என்ஜினீயர்கள் நடராஜன், கண்ணதாசன், உதவி என்ஜினீயர் தங்கவேல், உதவி நிலநீர் வல்லுனர் லட்சுமணன், துணை நிலநீர் வல்லுனர் தர்மலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்