ரூ.2,230 கோடியில் 154 கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம்

ரூ.2,230 கோடியில் 154 கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் அமைக்கப்படும் என்று கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்.

Update: 2022-11-08 18:45 GMT

கள்ளக்குறிச்சி:

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான குடிநீர் மற்றும் சுகாதாரக் குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறத்தில் பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக காவிரி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ரூ.2,230 கோடியில் செயல்படுத்த...

இதன் மூலம் 2 ஒன்றியங்களை சேர்ந்த 154 கிராமங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். இந்த திட்டத்தை ரூ.2,230 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. அரசின் ஒப்புதலுக்குப் பின் இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வக்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, அரசு அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்