குறுவை தொகுப்பு திட்டம் குறித்து வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு

சீர்காழி பகுதியில் குறுவை திட்டம் குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-08 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி பகுதியில் குறுவை திட்டம் குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

குறுவை தொகுப்பு திட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்துவதற்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குனர் சேகர் கலந்து கொண்டு சீர்காழி மற்றும் கொள்ளிடம் வட்டார வேளாண்மை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

குறுவை தொகுப்பு திட்டம் அனைத்து விவசாயிகளையும் சென்றடைவதற்கான அறிவுரைகளை வழங்கினார்.பின்னர் சீர்காழி அருகே உள்ள புங்கனூர் கிராமத்தில் செல்வராஜ் என்ற விவசாயியின் வயலில் விதைப்பு கருவி மூலம் விதைப்பு செய்த வயலினை ஆய்வு மேற்கொண்டார்.

விதைப்பு கருவி

அப்போது விதைப்பு கருவி மூலம் விதைப்பு செய்த வயலில் ஏக்கருக்கு எட்டு கிலோ விதை அளவு போதுமானது மேலும் ஒரே சீரான இடைவெளியில் நெல் பயிர் உள்ளது பயிருக்குப் பயிர் போதுமான இடைவெளி இருப்பதனால் நன்கு தூர் பிடித்துள்ளது. சாதாரண முறையில் விதைப்பு செய்வதால் விதை அளவு அதிகம் தேவைப்படுவதுடன் பயிர் நெருக்கமாக இருப்பதினால் சரியாக தூர் கட்டுவதில்லை.

எனவே அனைத்து விவசாயிகளும் விதைப்பு கருவி மூலம் விதைப்பு செய்து அதிக மகசூல் பெற கேட்டுக்கொள்கிறேன். விதைப்பு கருவி 50 சதவீத மானிய விலையில் வேளாண்மை துறையில் உள்ளது எனவே தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு 50 சதவீத மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என கூறினார். ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் சீர்காழி ராஜராஜன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்