திருமால்பாடி ரங்கநாத பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு

திருமால்பாடி ரங்கநாத பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு செய்தார்

Update: 2023-06-12 13:52 GMT

சேத்துப்பட்டு

திருமால்பாடி ரங்கநாத பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு செய்தார்.

தேசூர் அருகே உள்ள திருமால்பாடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. மலை மீது உள்ள இந்த கோவிலை புதுப்பித்து திட்டப்பணிகள் மேற்கொள்ள திருவண்ணாமலை மாவட்ட இந்து அறநிலையத்துறை ஆணைய அலுவலர் சுதர்சனம், தொல்லியல்துறை அலுவலர் சேகர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.அவருடன் ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் செயல் அலுவலர் சரண்யாவும் வந்திருந்தார். ஆய்வின்போது கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.


Tags:    

மேலும் செய்திகள்