இளங்கலை படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கு அடுத்த மாதம் (ஜூலை) 27-ந் தேதி கடைசி நாள் ஆகும்

Update: 2022-06-28 15:21 GMT

வடவள்ளி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கு அடுத்த மாதம் (ஜூலை) 27-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

இணையதள சேவை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டிற் கான இளங்கலை படிப்பில் சேர ஆன்லைனில் மூலம் விண்ணப் பிக்க இணையதள சேவை நேற்று தொடங்கியது.

இதை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 18 உறுப்பு கல்லூரிகள்,

28 இணைப்பு கல்லூரிகளில் பயிற்றுவிக்கப் படும் 12 இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு 2022 -23-ம் ஆண்டிற்கு மாணவர் சேர்க்கைக்காக ஆன்லைனில் விண்ணப் பிக்க வசதியாக இணையதளம் நேற்று தொடங்கப்பட்டது.

பாடப்பிரிவுகள்

இதில், இளம் அறிவியல் பாடப்பிரிவுகளான இளம்அறிவியல் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை, வனவியல் உணவு ஊட்டச்சத்து, உணவு முறையியல், பட்டு வளர்ப்பு, உணவு தொழில் நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சூற்றுச்சூழல் பொறியியல், வேளாண்மை, வணிக வேளாண்மை, ஆகிய படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

உறுப்புக்கல்லூரிகளில் 2,148 இடங்களும், இணைப்பு கல்லூரிக ளில் 2,337 இடங்களும் உள்ளன. இதற்கு இணைய தளம் வாயி லாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

12 பாட பிரிவுக ளுக்கும் tanu.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் அடுத்த மாதம் (ஜூலை) 27-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தகவல் கையேடு

2022- 23 -ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக பதிவு செய்தல், விண்ணப்பம் நிரப்புதல், தரவரிசை பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இட ஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடப்பிரிவு, கல்லூரிகளை ஒதுக்கீடு செய்தல், கல்லூரி சேர அனுமதி வழங்குதல் ஆகிய அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும்.

மாணவர் சேர்க்கை குறித்த இதர விவரங்களை tnau.ac.in இணைய தளத்தில் உள்ள தகவல் கையேடு மூலம் அறிந்து கொள்ளலாம்.

சிறப்பு ஒதுக்கீடு

விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள், உடல் ஊனமுற்றோ ருக்கு 125இடம், வேளாண்மை தொழில் துறைக்கு 225 இடம், ஐசிஆர்க்கு 125 இடம், அந்மான் நிகோபர் மாணவர்களுக்கு 13 இடம், ஜம்மு-காஷ்மீர் மாணவர்களுக்கு 2 இடம், வெளிநாடுவாழ் மாணவர்களுக்கு 32 இடம் என 971 இடங்கள் சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் உழவர் வணிக வளாகம் விரைவில் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்