கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
தாசில்தார்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தேசிய நெடுஞ்சாலை 7 தனி மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளர் (நிலம் எடுப்பு) சக்திவேல், சூளகிரி தாசில்தாராகவும், ஓசூர் தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) அலகு 1 மோகன் அஞ்செட்டி தாசில்தாராகவும், அஞ்செட்டி தாசில்தார் அனிதா, போச்சம்பள்ளி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல சூளகிரி தாசில்தார் பன்னீர்செல்வி, தேசிய நெடுஞ்சாலை 7, 46, தனி மாவட்ட வருவாய் அலுவலரின் (நிலம் எடுப்பு) நேர்முக உதவியாளராகவும், போச்சம்பள்ளி தாசில்தார் தேன்மொழி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலை, 844 அலகு 1 தனி தாசில்தாராகவும் (நிலம் எடுப்பு), சூளகிரி சிப்காட் நிலை 4, அலகு 7, தனி தாசில்தார் ஜெகதீஸ்குமார், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 1 தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நீதியியல் பயிற்சி முடித்தவர்கள்
மேலும் நீதியியல் பயிற்சி முடித்து வரும் பெரியண்ணன், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 2 தனி தாசில்தாராகவும், சக்தி, நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 3, தனி தாசில்தாராகவும், ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 844, அலகு 1 தனி தாசில்தார் காமாட்சி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 948 ஏ, அலகு 2, தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 1 தனி தாசில்தார் சிதம்பரம், ஓசூர் கோட்ட ஆய அலுவலராகவும், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 2, தனி தாசில்தார் வேலு, ஓசூர் தனி தாசில்தாராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்) இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சூளகிரி சிப்காட் நிலை 4, அலகு 1 தனி தாசில்தார் ராஜலட்சுமி, சிறப்பு திட்ட செயலாக்க தனி தாசில்தாராகவும் நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 3 தனி தாசில்தார் மோகன், ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 948 ஏ, அலகு 1, தனி தாசில்தாராகவும் (நிலம் எடுப்பு) இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு பிறப்பித்துள்ளார்.