பாலக்கோட்டில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்

Update: 2023-04-01 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோட்டில் உள்ள அண்ணா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் பத்ஹி முகமது நசீர் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு தனியார் நிறுவனங்களும், 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர். பாலக்கோடு பேரூராட்சி தலைவர் முரளி, தேர்வு செய்யப்பட்ட 85 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார உதவி திட்ட இயக்குனர்கள் ராஜேஷ், பெரியநாயகம், மேலாளர் சிவலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியர் பாலசண்முகம் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்