ஜீவாமிர்தம் கரைசல் தயாரிப்பு பயிற்சி

தோட்டக்கலைத்துறை சார்பில் ஜீவாமிர்தம் கரைசல் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-09-16 15:16 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், இயற்கை வேளாண்மை சூழலை ஊக்குவிக்கும் திட்டமான பாரதிய பிராக்கரித்திக் கிரிஷி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 5 கிராமங்களில் ஜீவாமிர்தம் மேளா நடைபெற்றது. ஜக்கனாரையில் நடந்த மேளாவை கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா முன்னிலை வகித்தார். இதில் வட்டார சமூக வள பயிற்றுனர் ராமதாஸ், ஜீவாமிர்தம் கரைசல் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்ததோடு, இயற்கை வேளாண்மையில் ஜீவாமிர்தத்தின் பங்கு குறித்தும் விளக்கினார். தோட்டக்கலை அலுவலர் தயானந்தன் பயனாளிகளுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப பயிற்சிகள் குறித்து எடுத்துரைத்தார். மேளாவில் ஒரு பயனாளி 200 லிட்டர் வீதம், 25 பயனாளிகள் இணைந்து 5 ஆயிரம் லிட்டர் ஜீவாமிர்தத்தை தயார் செய்தனர். இதைப்போல கூக்கல், நெடுகுளா, தேனாடு, அரக்கோடு ஊராட்சிகளிலும் மேளா நடந்தது. இந்த மேளாவில் 5 கிராம ஊராட்சிகளில் 125 பயனாளிகள் இணைந்து, மொத்தம் 25 ஆயிரம் லிட்டர் ஜீவாமிர்தம் கரைசலை தயார் செய்தனர். முன்னதாக உதவி அலுவலர் பாஸ்கர் வரவேற்றார். முடிவில் வட்டார தொழிலுட்ப மேலாளர் பிரசாந்த் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்