ஜிப்மர் கட்டுமானப் பணிகள் விவகாரம் - ஒரு வாரத்தில் சான்றிதழ் வழங்க புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சுற்றுச்சூழல் ஒப்புதல் இல்லாமல், புதிய கட்டிடங்களுக்கு பணி முடிப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் 201 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டுமானங்கள் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த கட்டுமானங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே, கட்டிட பணி முடிப்புச் சான்று வழங்கப்படும் என, புதுச்சேரி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை எதிர்த்து, ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சுற்றுச்சூழல் ஒப்புதல் இல்லாமல், புதிய கட்டிடங்களுக்கு ஒரு வாரத்தில் பணி முடிப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டனர்.