மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகம் எதிரில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாரண்டஅள்ளி பேரூர் செயலாளர் கோவிந்தன் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் செந்தில், மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராசன், அத்திமுட்லு ஊராட்சி மன்ற தலைவர் மாதுராஜ், சாமனூர் கிளை செயலாளர் சிவம், ரவி, அரவிந்த், சுரேஷ், ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.