திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயம்

இது தொடர்பாக சமஸ்தான தேவஸ்தானத்தின் திவான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-03-30 07:32 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அடுத்துள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் புனிதத்தலமானது ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையது. 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.

இந்த கோவிலில் பெருமாள் மற்றும் அம்பாள் சன்னதியில் உள்ள சாமிகளுக்கு அணிவிக்கப்படும் நகைகளை கடந்த வாரம் கணக்கிடும் போது பெட்டகத்தில் இருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பாரம்பரிய மற்றும் பழமையான நகைகள் மாயமானது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக பெட்டகத்தை வைத்திருந்த ஸ்ரீனிவாச ஐயங்காரிடம் சமஸ்தான தேவஸ்தானத்தின் திவான் பழனிவேல் பாண்டியன் கேட்டபோது, இரு வாரத்தில் பதில் அளிப்பதாக கூறியுள்ளார்.

இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், அவர் பதில் ஏதும் அளிக்காததால், தேவஸ்தானத்தின் திவான் பழனிவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை விசாரித்து வருகிறது.

 

 

Tags:    

மேலும் செய்திகள்