தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறித்த ஆசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.;

Update:2024-04-19 06:48 IST

கோவை,

கோவை செல்வபுரம்-பேரூர் சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி அருகே வசித்து வருபவர் மல்லிகா(வயது 70). சம்பவத்தன்று மதியம் இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கையில் துண்டு பிரசுரங்களுடன் வீட்டிற்கு வந்தார்.

அவரை பார்த்த மல்லிகா நீங்கள் யார் என கேட்க, அந்த நபர், தான் ஓட்டு கேட்க வந்திருப்பதாகவும், வெயிலில் சுற்றியதால் தாகம் எடுப்பதாகவும், குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டார். மல்லிகாவும் தண்ணீர் எடுத்து வர வீட்டிற்குள் சென்றார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மர்மநபர், திடீரென மல்லிகாவின் கழுத்தில் அணிருந்திருந்த 8 பவுன் நகையை பறித்து கொண்டு, தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மர்ம ஆசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்