டெய்லர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கோவையில் டெய்லர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.
கோவை
கோவை காட்டூர் காளப்பன் வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 60). டெய்லர். இவர் சம்பத்தன்று வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கேரளமாநிலம் மலம்புழாவிற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 8 பவுன் நகைகள், ரூ.32 ஆயிரம் ஆகியவை திருடு போயிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.