கடலூரில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 6 பவுன் நகை திருட்டு போலீசார் விசாரணை

கடலூரில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 6 பவுன் நகை திருட்டு போனது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Update: 2022-12-04 18:45 GMT


புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி விஜயலட்சுமி (வயது 32). இவர் நேற்று புதுச்சேரியில் இருந்து தனியார் பஸ்சில், கடலூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார். அப்போது 6 பவுன் நகையை ஒரு பையில் வைத்திருந்தார். அவர் கடலூர் மஞ்சக்குப்பம் தபால் நிலைய பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கி வீட்டுக்கு சென்று பார்த்தபோது, பையில் வைத்திருந்த 6 பவுன் நகையை காணவில்லை. அதை ஓடும் பஸ்சில் யாரோ மர்மநபர் திருடிச்சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றி விஜயலட்சுமி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்