வீட்டில் தூங்கிய சிறுமியிடம் நகை திருட்டு
வீட்டில் தூங்கிய சிறுமியிடம் நகை திருட்டு
புதுக்கடை:
புதுக்கடை அருகே உள்ள இனயம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஜான் இளங்கோ(வயது45). இவருடைய தந்தை மில்கியாஸ் கடந்த 26-ந்தேதி இறந்துபோனார். அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சி கடந்த 28-ந்தேதி நடைபெற்றது. நிகழ்ச்சியில் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்று இரவு வீட்டில் தூங்கிவிட்டு காலையில் எழுந்தனர். அப்போது ஜான் இளங்கோவின் மகள் அகசியா ஜான்(15) கழுத்தில் அணிந்திருந்த 1¾ பவுன் தங்கச்சங்கிலி மாயமாகி இருந்தது. நள்ளிரவில் யாரோ மர்ம நபர் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜான் இளங்கோ புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் நகை திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.