ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் பட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் மாலா (வயது 32). இவர் நேற்றுமுன்தினம் ராஜபாளையத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றார். பின்னர் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு பஸ்சில் ஏறி வீட்டிற்கு செல்லும் வழியில் அவரது பையில் வைத்திருந்த 2 பவுன் நகையை காணவில்லை. இது குறித்த புகாரின்பேரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.