வங்கி அலுவலர் வீட்டில் நகை திருட்டு

எடப்பாடி அருகே வங்கி அலுவலர் வீட்டில் நகை திருட்டு போனது.

Update: 2023-05-10 20:35 GMT

எடப்பாடி

எடப்பாடி அருகே ஜலகண்டாபுரம் சாலை பெருமாள் கோவில் காலனியை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மனைவி சுந்தராம்பாள் (வயது 55). இந்த தம்பதியின் மகன் சிவா (34). இவர் திருவண்ணாமலையில் உள்ள அரசு வங்கியில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். மேலும் அங்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி உள்ளார். மாதையன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், சுந்தராம்பாள் எடப்பாடியில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுந்தராம்பாள் தனது மகனை பார்க்க திருவண்ணாமலைக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அங்கிருந்த 1½ பவுன் நகை மற்றும் எல்.இ.டி. டி.வி.யை திருடி சென்றனர். இதுகுறித்து சுந்தராம்பாள் கொடுத்த புகாரின்பேரில் எடப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்