என்ஜினீயர் வீட்டில் நகை, பிளாட்டினம் திருட்டு

சேலத்தில் என்ஜினீயர் வீட்டில் நகைகள், பிளாட்டினம் ஆகியவை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-03-15 20:22 GMT

சேலத்தில் என்ஜினீயர் வீட்டில் நகைகள், பிளாட்டினம் ஆகியவை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகைகள் திருட்டு

சேலம் அழகாபுரம் ஜூவாலிக்கல் பார்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி (வயது 39). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவரது வீட்டில் தற்போது மின்சாதன பொருட்கள் பழுது பார்த்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இவரது வீட்டில் 3 பேர் கடந்த சில நாட்களாக எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த ரூ.3½ லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் லட்சக்கணக்கான மதிப்பில் உள்ள பிளாட்டினம் ஆகியவை திருட்டு போனது. அதே போன்று வீட்டில் இருந்த விலை உயர்ந்த செல்போனும் காணவில்லை. இது குறித்து ஜெயமணி அழகாபுரம் போலீசில் புகார் செய்தார்.

விசாரணை

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, செல்போன், பிளாட்டினம் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் என்ஜினீயர் வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்