தொழிலாளி வீட்டில் நகை திருட்டு
ஓசூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை திருட்டு போனது.
ஓசூர்
ஓசூர் அருகே கதிரேப்பள்ளியை சேர்ந்தவர் குடியப்பா (வயது 45). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். மாலை வந்த போது வீட்டின் கதவு திறந்து இருந்தது. மேலும் வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 1¼ பவுன் நகை மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து குடியப்பா அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.