ஆசிரியை வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
காவேரிப்பட்டணத்தை அருகே ஆசிரியை வீட்டில் 10 பவுன் நகை திருட்டு போனது.
காவேரிப்பட்டணத்தை அடுத்த சவுளூர் கூட்டு ரோடு பூமாலை நகரை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மனைவி கலைவாணி (வயது 52). இவர் மோரனஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று இருந்தார். திரும்பி வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியன திருட்டு போய் இருந்தன. இதுகுறித்து கலைவாணி காவோரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.