கொல்லங்கோடு அருகே பெண்ணிடம் நகை பறிப்பு; 2 பேர் கைது

கொல்லங்கோடு அருகே பெண்ணிடம் நகையை பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-04 18:07 GMT

கொல்லங்கோடு, 

பெண்ணிடம் நகையை பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நகை பறிப்பு

கொல்லங்கோடு அருகே வெங்கஞ்சி இடகண்டம்விளை பகுதியை சேர்ந்தவர் வில்சன் மனைவி சசிகலா (வயது 50). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் பின்புறம் கோழிகளுக்கு தீவனம் கொடுத்து கொண்டிருந்தார்.

அப்போது முகமூடி அணிந்த நபர் அங்கு வந்து திடீரென சசிகலாவின் முகத்தில் மஞ்சள் கலந்த மிளகாய்பொடியை தூவியுள்ளார். இதனால் சசிகலாவுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு அலறினார்.

2 பேர் கைது

அந்த சமயத்தில் அவருடைய கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் நகையை பறித்து விட்டு தப்பினார். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தியதில் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் கொல்லங்கோடு சாமவிளை பகுதியை சேர்ந்த வில்லியம் மகன் வினீஷ் (வயது 22) என்பது தெரியவந்தது.

பறிக்கப்பட்ட நகையை விற்பதற்கு அவருக்கு முளவிளாகம் பகுதியை சேர்ந்த லூக்கோஸ் மகன் செஜூ (28) என்பவர் உதவியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் 2 பேரை கைது செய்து நகையை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்