பெண் அலுவலரிடம் நகை பறிப்பு
பெண் அலுவலரிடம் நகை பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
மாத்தூர் குருத்தூரை சேர்ந்தவர் அமுதா (வயது 52). இவர் சமூக நலத்துறையில் கிராம பெண்கள் நல அலுவலராக பணியாற்றி வருகிறார். தமுக்கத்தில் அரசு பொருட்காட்சியில் சமூக நலத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் இருந்து இரவு வீட்டுக்கு திரும்பினார். அவர் காந்தி மியூசியம் ரோட்டில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் 2 போ் அவரை பின் தொடர்ந்து வந்தனர். திடீரென்று அவர்கள் அமுதா அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.