தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-07-26 19:13 GMT

செஞ்சி,

செஞ்சி அருகே ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி மஞ்சுளா. நேற்று முன்தினம் இரவு ஜெய்சங்கர் வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இரவு 10.30 மணி அளவில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் புகுந்தார். இதைபார்த்த மஞ்சுளா சத்தம் போட முயன்றார். ஆனால் அதற்குள் அவரது வாயில் துணியை வைத்து மர்மநபர் அடைத்தார். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 1 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்