பெண்களிடம் நகை மோசடி
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்களிடம் நகை மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி தெருவில் வசித்து வருபவர் பழனி குமார். இவர் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் உள்ள பெண்களிடம் உங்கள் கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே தங்க நகைகளை கொடுங்கள். பூஜை செய்து தருகிறேன் என கூறி சுமார் 50 பவுன் நகைகளை 4 பெண்களிடம் பெற்று, பூஜை செய்து தருவதாக மோசடி செய்துள்ளார். இது குறித்து ராமேஸ்வரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.