காரைக்குடி
காரைக்குடியில் நகைத்தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிர்வாக குழு தேர்தல் சிதம்பரம் ஆச்சாரி அறக்கட்டளை மண்டபத்தில் நடைபெற்றது. உறுப்பினர்கள் அனைவரும் வாக்குச்சீட்டு மூலம் வாக்களித்தனர். இதில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு ராமசாமி தலைவராக வெற்றி பெற்றார். இதைதொடர்ந்து அவரது தலைமையிலான நிர்வாக குழு பதவி ஏற்பு விழா காரைக்குடி அம்மன் சன்னதியில் உள்ள சங்க அலுவலக வளாகத்தில் மாநில துணைத்தலைவர் தெய்வசிகாமணி தலைமையில் விஸ்வகர்ம சமூக முன்னேற்ற அறக்கட்டளை தலைவர் சோலைமலை ஆச்சாரி முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவராக அப்பாவு ராமசாமி, செயலராக வைரவேல் பொருளாளராக காளிமுத்து துணைத்தலைவர்களாக சுப்பிரமணியன், ஆனந்தன், துணைச்செயலாளர்களாகரவி, நாகராஜன், பழனிக்குமார், பிரகாஷ், ஜெகன், சதீஷ்குமார் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். பின்னர் உறுப்பினர்களுக்கு பொற்கொல்லர் நலவாரிய அட்டைகள் பெற்று கொடுப்பது, மத்திய அரசின் அமைப்புசாரா தொழிலாளர் துறையில் பதிவு செய்து கொடுப்பது, நலிவுற்ற நகைத்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு கல்வி, திருமணம், மருத்துவ உதவிகள் வழங்குவது உள்ளிட்ட சங்கத்தின் செயல்திட்டங்கள் அறிக்கப்பட்டது.