சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகைகள் சரிபார்ப்பு பணி மீண்டும் தொடக்கம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகைகள் சரிபார்ப்பு பணி மீண்டும் தொடங்கியது.;

Update: 2022-09-12 17:47 GMT

அண்ணாமலை நகர், 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி உள்ளிட்ட சாமிகளுக்கு ஏராளமான தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகள் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சரிபார்க்கப்பட்டு, ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கிய சாிபார்ப்பு பணி இரண்டு கட்டங்களாக நடந்துள்ளது.

இந்த ஆய்வின் போது கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை நடராஜர் கோவிலுக்கு வரப்பெற்ற பல்வேறு நகைகள் மற்றும் காணிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 2-ந் தேதி முதல் ஆய்வு நடைபெறவில்லை. இந்நிலையில் 3-வது கட்டமாக நகைகள் சரிபார்ப்பு பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் கோவிலில் உள்ள ஆவணங்களை பார்வையிட்டு, அதன் அடிப்படையில் நகைகள் சரியாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். இதில் கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு கோவிலுக்கு வரப்பெற்ற நகைகள் குறித்த ஆவணங்களை பார்வையிட்டு அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு பணி, இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்