சேலத்தில் வியாபாரி வீட்டில் 21 பவுன் நகை திருட்டு

சேலத்தில் வியாபாரி வீட்டில் 21 பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-09 22:18 GMT

21 பவுன் நகை திருட்டு

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 39). இவர் கற்பூரம் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி திவ்யபாரதி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை மனைவியுடன் வெளியே சென்ற வெங்கடேஷ் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார்.

இதையடுத்து அவர் முதல் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றார். அப்போது அங்கு பிரோவின் கதவு திறக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் அங்கு சென்று பார்த்தார். இதில் பீரோவில் இருந்த 21 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது போனது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

பின்னர் இதுகுறித்து வெங்கடேஷ் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடேசனின் வீட்டின் மொட்டை மாடி கதவு திறந்து கிடந்ததால் அதன் வழியாக மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகையை திருடி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்