ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

Update: 2023-06-10 15:54 GMT


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா டி.ராமநாதபுரத்தை சேர்ந்த ராதா லட்சுமி (வயது 63). இவர் திருச்சுழி அருகே உள்ள எம்.ரெட்டியபட்டியில் காதுகுத்து நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அருப்புக்கோட்டையிலிருந்து பஸ் ஏறி விருதுநகர் வந்தார். விருதுநகர் பழைய பஸ் நிலையத்துக்கு வந்த போது அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இது பற்றி ராதா லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்