ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடி சென்றனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே மேலகுருணைகுளத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கலைச்செல்வி (வயது36). இவர் ம.ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சேதமடைந்த தனது நகையை அருப்புக்கோட்டை நகைக்கடையில் சரி செய்துவிட்டு மீண்டும் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது தான் கையில் வைத்திருந்த கட்டை பையை பார்த்தபோது பர்சில் வைத்திருந்த 1½ பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கலைச்செல்வி டவுன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.