கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணியிடம் நகை திருட்டு

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணியிடம் நகை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-28 06:33 GMT

சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவை சேர்ந்தவர் தமிழழகன் (வயது 27). இவர், சென்னையில் இருந்து சேலம் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருந்தார். தனது ைபயை வைத்துவிட்டு அதன் அருகில் தூங்கினார். சிறிது நேரம் கழித்து கண்விழித்து பார்த்தபோது அருகில் 2 பவுன் நகை வைத்திருந்த பை திருட்டுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக விழுப்புரத்தை சேர்ந்த செந்தில் (50), என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்