சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு

சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு போனது.

Update: 2022-09-13 18:41 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் சர்க்கரை ஆலை குடியிருப்பில் வசித்து வருபவர் திருத்தணிகை நாதன் (வயது 53). இவர் எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று திருத்தணிகை நாதன் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவும் திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் மற்றும் 2 வெள்ளி குத்து விளக்குகள், 1 காமாட்சி விளக்கு, 1 வெள்ளி டம்ளர் ஆகியவை திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்