சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு...!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 43 ஆயிரத்தை கடந்துள்ளது.;

Update: 2023-03-14 05:11 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ரூ. 43,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் ரூ. 5,390 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ரூ. 43 ஆயிரத்தை தாண்டியதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதைபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.50 உயர்ந்து ரூ.72க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்