பெண்ணிடம் நகை மோசடி

நகை மோசடி செய்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-09-21 19:53 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் ரோடு இந்திரா நகரை சேர்ந்த முருகன் மனைவி மகேஸ்வரி (வயது 43). இவரிடம் அதேபகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி ஜூலியட்ராணி என்பவர் தனது கணவருக்கு உடல்நலம் சரியில்லை என கூறி மருத்துவ செலவுக்கு பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய மகேஸ்வரியிடம் இருந்து 3 பவுன் நகையை வாங்கி சென்று அடகு வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மகேஸ்வரி வீடு கட்ட முடிவு செய்து அதற்காக வங்கி கடன் பெற முயன்ற போது அதற்கு தாங்கள் உதவி செய்வதாக கூறி ஜூலியட்ராணி, அவரது கணவர் சுந்தரமூர்த்தி இருவரும் மகேஸ்வரியின் 18 பவுன் நகையை வாங்கி தங்களது பெயரில் அடகு வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. வங்கி கடனும் வாங்கி தரவில்லை. தன்னிடம் வாங்கிய நகைகளையும் திருப்பி தரவில்லை என்று மகேஸ்வரி சிவகாசி கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவுப்படி தம்பதி மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்