பொன்னேரி அருகே ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் நகை-பணம் திருட்டு

பொன்னேரி அருகே ஒன்றிய கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருடப்பட்டது.;

Update: 2022-08-31 09:23 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள அத்திப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 51). இவர் சோழவரம் ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார்.

இவருக்கு ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலையில் திருமண மண்டபம் இருக்கும் நிலையில் தற்காலிகமாக அண்ணாநகரில் வசித்து வருகிறார்.

அத்திப்பேடு வீட்டுக்கு காலை, மாலையில் வந்து செல்வது வழக்கம் இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து படுக்கை அறையில் இருந்த 2 பவுன் தங்க நகைகள் ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து பிரகாஷ் சோழவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்