மோட்டார் சைக்கிள் மோதி நகை தொழிலாளி படுகாயம்

சாத்தான்குளத்தில் மோட்டார் சைக்கிள் மோதி நகை தொழிலாளி படுகாயம் அடைந்துள்ளார்.;

Update: 2023-01-10 18:45 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் மெயின் பஜாரை சேர்ந்த ஞானதேவ் மகன ்சிவாஜி (வயது 46). இவர் தங்க நகைகளுக்கு பாலிஷ் போடும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 8-ந் தேதி அவர் வீட்டின் முன்புள்ள சாலையை கடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த சாலையில் அதிவேகமாக வந்த ஆர்.சி தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் ராமச்சந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிவாஜியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவாஜி பலத்தகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்