திருவெண்ணெய்நல்லூர் அருகே அம்மன் கோவிலில் நகை திருடியவர் கைது
திருவெண்ணெய்நல்லூர் அருகே அம்மன் கோவிலில் நகை திருடியவர் கைது செய்யப்பட்டாா்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற புத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக பெருமாள் என்பவர் உள்ளார். இவரின் பேரன் பிரகாஷ் (30).
இவர் கோவிலுக்கு சாமி கும்பிட பக்தர்கள் வந்துள்ளார்கள் என்று கூறி, கோவில் சாவியை எடுத்து சென்று கோவிலின் பூட்டை திறந்து அம்மன் கழுத்தில் இருந்த 4 பவுன் நகையை திருடி சென்றுவிட்டார்.
இதுகுறித்து, ஊர் நாட்டாமை தேவநாதன் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து, பிரகாசை கைது செய்தார்.