விழுப்புரம் அருகேஅடகு கடையில் நகை திருட்டு
விழுப்புரம் அருகே அடகு கடையில் நகை திருட்டுபோனது.;
செஞ்சி,
விழுப்புரம் அடுத்த கெடார் அருகே உள்ள வி. புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் ரமேஷ். இவர் அதே பகுதியில் நகை அடகு கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் மதியம் இவர் கடையில் வேலை பார்க்கும் ராஜாராம் என்பவரை கடையில் விட்டுவிட்டு, வீட்டுக்கு சாப்பிட சென்றார். அப்போது கடைக்கு வந்த 2 பேர், பஞ்சலோகம் கேட்டு வாங்குவது போன்று, நடித்து கடையின் கல்லாவில் இருந்த 2 பவுன் தங்க செயினை திருடிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.