மூதாட்டியிடம் 7½ பவுன் நகை அபேஸ்
மூதாட்டியிடம் 7½ பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்
சிவகங்கை
சிவகங்கை காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாரா (வயது 65). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் தாராவிடம் தாங்கள் போலீசார் எனவும், கழுத்தில் தங்க சங்கிலி அணிந்து இப்படி தனியாக ரோட்டில் சென்றால் திருடர்கள் பறித்து சென்று விடுவார்கள் என்றும் கூறியுள்ளனர். மேலும் தாரா அணிந்திருந்த 7½ பவுன் கொண்ட 2 தங்க சங்கிலிகளை வாங்கி ஒரு பேப்பரில் மடித்து அவரிடம் கொடுப்பதுபோல் கொடுத்தனர். இதையடுத்து தாரா வீட்டுக்கு சென்று பேப்பரை பிரித்து பார்த்தபோது அதில் சங்கிலி இ்ல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.