கடைக்கு நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

கடைக்கு நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.

Update: 2023-05-27 19:01 GMT

அலங்காநல்லூர், 

அலங்காநல்லூர் அருகே தினமணி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நிர்மலா (வயது 53). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது ேமாட்டார்சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் நிர்மலாவின் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் வழிப்பறி செய்த வாலிபர்களை வலை வீசி தேடி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்