பழனியில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
பழனியில் பெண்ணிடம் 7 பவுன் நகையை மர்மநபர் பறித்து சென்றார்.;
பழனி திருநகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி சாந்தி (வயது 48). இவர் நேற்று இரவு வீட்டு முன்பு நின்று கொண்டு தனது பேத்திக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கண்இமைக்கும் நேரத்தில் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பிவிட்டார்.
இதுகுறித்து அண்ணாதுரை பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.