மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறிப்பு

போலீசார் போல நடித்து மூதாட்டியிடம் 2 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2022-09-21 18:45 GMT
சிவகங்கை நாகூர் தெருவை சேர்ந்தவர் ராக்காயி (வயது 65). சம்பவத்தன்று இவர் பகல் 11 மணியளவில் சிவகங்கை குமாரசாமி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 பேர் வந்தனர். அவர்கள் ராக்காயியை அழைத்து தாங்கள் போலீஸ்காரர்கள் என்று கூறினர். மேலும் பாதுகாப்பு இல்லாமல் கழுத்தில் தங்க சங்கிலியை அணிந்து போகலாமா என்று கேட்டு அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை வாங்கி ஒரு பார்சலில் போட்டு அதனை ராக்காயி வைத்திருந்த பையில் வைத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு சென்று பையை அவர் திறந்து பார்த்தபோது அதில் நகை இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இதுகுறித்து சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவுசெய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்