பேரையூர் அருகே தொட்டணம்பட்டியை சேர்ந்தவர் சீதாலட்சுமி. இவர் சம்பவத்தன்று தொட்டணம்பட்டி காலனியில் இருந்து தொட்டணம்பட்டிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், சீதாலட்சுமியை கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.இது குறித்து சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை வழிப்பறி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.