மூதாட்டியிடம் நகை பறிப்பு

அலங்காநல்லூரில் மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது.

Update: 2022-12-10 19:25 GMT

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர் அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் தனம் (வயது 69) . இவர் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். அவர் பின்னால் ஒரு பெண் அமர்ந்து பயணம் செய்தார். கண்ணிமைக்கும் ேநரத்தில், வாகனத்தில் வந்த அந்த பெண், தனம் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர்.

இது பற்றிய புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியிடம் நகை பறித்த பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்